மக்கள் தங்கள் தொழிலை வணங்கும் வகையில் மாநிலம் முழுவதும் பழம், பூ, வெற்றிலை பாக்கு, பொரிகடலை ஆகியவற்றை வைத்து இன்று ஆயுதபூஜை பண்டிகையை கொண்டாடிவருகின்றனர்.
கோயம்பேடு காமராசர் மலர் சந்தை வளாகத்தில் பூஜைப் பொருள்கள் விற்பனை செய்வதற்காக தற்காலிக கடைகள் போடப்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
பூஜைப் பொருள்களான பூசணிக்காய் கிலோ 15 ரூபாய்க்கும் வாழைக் கன்று 20 ரூபாய்க்கும் தேங்காய் 25 முதல் 35 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. பொரி படி 20 ரூபாய்க்கும் பொரி, கடலை, நாட்டுச்சக்கரை, அவல் உள்ளிட்ட நான்கு பொருட்கள் சேர்த்த பொட்டலம் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அலங்கார பூவான சாமந்தி கிலோ 200 ரூபாய்க்கும் அரளி 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு சந்தையில் ஆயுத பூஜை விற்பனை அமோகம் பண்டிகை காலம் என்பதால் பூஜைப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தாலும் பலரும் தங்களது குடும்பத்தினருடன் சென்று பூஜைக்கான பொருட்களை ஆர்வமாக வாங்கிச் சென்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆயுதபூஜை: பரமத்தி வேலூரில் வாழைத்தார் ஏலம் வீழ்ச்சி!