தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 30, 2021, 7:33 AM IST

ETV Bharat / state

'அடக்குமுறையால் வெல்வது கொடுங்கோல்' - மோடியின் புதுச்சேரி வருகையை விமர்சித்த கமல்

"அடக்குமுறை செய்து மக்களை வென்று விடலாம் என்று நினைப்பது கொடுங்கோல்" என கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி புதுச்சேரியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மோடியின் புதுச்சேரி வருகையை விமர்சித்த கமல்
மோடியின் புதுச்சேரி வருகையை விமர்சித்த கமல்

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தி.நகர் வேட்பாளர் பழ கருப்பையாவை ஆதரித்து அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் வடபழனியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி புதுச்சேரி வருவதையொட்டி அங்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஆச்சர்யமாக உள்ளது. அவர் பேசும்போது வேறு யாரையும் பேசவிடக் கூடாது என்பதற்காக தான் இந்தத் தடை போடப்படுள்ளது. ஊரை அடக்கி பரப்புரை செய்வதில் பிரோஜனம் இல்லை. அடக்குமுறை செய்து மக்களை வென்று விடலாம் என்று நினைப்பது கொடுங்கோல்.

இங்கே இருப்பவர்கள் வறுமையை ஒழிக்கப் போவதாக கூறிவருகின்றனர். ஆனால் செழுமை கோட்டுக்கு மேல் மக்களை வாழ வைப்பதே மக்கள் நீதி மய்யதின் இலக்கு. ஏனென்றால் செழுமைக் கோட்டுக்கு மேல் உயர்த்தி விட்டால் எப்படிபட்ட கொடுங்கோல் ஆட்சி நடந்தாலும் நீங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் செல்லமாட்டார்கள்.

எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் அடுத்த தேர்தலில் நாங்கள் பரப்புரை செய்யாமல் மீதம் உள்ள வேலைகளை பார்ப்போம். நான்கு வயது முதல் தமிழ்நாடு என்னை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறது. அதனால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் என் மக்களுக்கு ஓர் பிரச்னை என்றால் பாத்துகொண்டு இருப்பது நல்லது இல்லை. நான் காந்தியின் கொள்ளுப்பேரன். நீங்களும் தான். காந்தியை நினைத்தால் நேர்மை தானாக வந்து விடும். என் பேச்சில் அழகைப் பார்க்கவில்லை. உங்கள் வாழ்க்கையில் அதைப் பார்க்க நினைக்கிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details