தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 21, 2019, 7:55 PM IST

ETV Bharat / state

இடஒதுக்கீடு மறு ஆய்வுக்குட்பட்டதல்ல! கி.வீரமணி அறிக்கை

சென்னை : இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருப்பது, இடஒதுக்கீட்டை ஒழிக்கும் திட்டத்தின் ஆழம் பார்க்கும் செயல் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

k-veeramani-give-statement-about-reservation

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

  • ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீடு குறித்து விவாதிப்போம் என்று கூறியிருப்பது ஆபத்தான யோசனை
  • ஏற்கனவே இடஒதுக்கீட்டின் அடிப்படையை தகர்க்கும் முயற்சியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியவர்கள் நீங்கிய உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்துள்ளது.
  • அரசியலமைப்புச் சட்டத்தின்படி பெரிய நிர்வாகப் பதவிகளில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் நேரடி நியமனங்கள், மாநில அரசுகளுக்குரிய நியமன அதிகார பறிப்புகள் ஆகியவை மூலம், முன்பே சமூக நீதிக்கு உலை வைக்கத்த தொடங்கப்பட்டு விட்டது.
  • இடஒதுக்கீட்டின் சமூக நிதியை அடியோடு ஒழித்துக்கட்டி வெறும் பொருளாதார அடிப்படை என்பதை சில காலம் வைத்து இறுதியில் இடஒதுக்கீடே தேவையில்லை என்ற முடிவை இந்த ஐந்தாண்டுக்குள் நிறைவேற்றிட முயற்சிக்கும் இந்த திட்டத்திற்கு சமூக நீதியாளர்கள், ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர் உட்பட அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க முன்வரவேண்டும்.
  • இடஒதுக்கீடு என்பது மறு ஆய்வுக்குட்பட்டதல்ல என்று இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • பாஜகவிற்கு கிடைத்துள்ள புல்டோசர் மெஜாரிட்டியைப் பயன்படுத்தி இடஒதுக்கீட்டை ஒழித்துவிடலாம் என்ற திட்டத்தின் முன்னோட்டம் தான் ஆர்.ஆர்.எஸ் தலைவரின் தற்போதைய பேச்சு.
  • 5000 ஆண்டு கால ஜாதிவருண தர்மக் கொடுமையிலிருந்து மீளும் எளிய முயற்சியே இடஒதுக்கீடு. அது சட்டப்படி நிரப்பப்படாத கொடுமையில் இப்படி ஒர் ஆரிய சூழ்ச்சியா?
  • எனவே தமிழ்நாட்டிலும், பிறமாநிலங்களிலும் உள்ள சமூகநீதியாளர்களும் தலைவர்களும் இதில் உரிய கவனம் செலுத்தி விழிப்புடன் இருக்கவேண்டும். ஆபத்து வரும் முன்னரே தடுத்தாக வேண்டும். இவ்வாறு, கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details