பொதுத்துறையை அழித்து தனியார் துறைக்கு கொடுப்பது தவறான கொள்கையென கே.எஸ்.அழகிரி சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்தார்.
தேவேந்திர குல வேளாளருக்கு பாஜக தான் சட்டதிருத்தம் கொண்டு வந்ததாக கோவையில் பிரதமர் மோடி பேசி உள்ளார். இது முற்றிலும் தவறானது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தான் 7 குழுக்களையும் ஒன்றாக தேவேந்திர குல வேளாளர் என பெயரிட வேண்டும் முதன் முறையாக குரல் கொடுத்தது.
சட்டப்பேரவை, பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசி உள்ளனர். தேவேந்திர குல வேளாளர் குறித்து பேசிய ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ் தான். தேர்தல் வருவதால் மோடி பேசுகின்றாரே தவிர உண்மையில் கொள்கை பூர்வமாக சமூகநீதி அடிப்படையில் காங்கிரஸ் தான் பேசியது. அந்த வகையில் தேவேந்திர குல வேளாளருக்கு நன்மை கிடைத்தால் அதன் முழு பொறுப்பை காங்கிரஸ் கட்சி எடுத்து கொள்ளூம். முழு பெருமையும் காங்கிரஸ் கட்சிக்கு தான்.
கே.எஸ்.அழகிரி சென்னை விமானநிலையத்தில் பேட்டி போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது. தமிழ்நாட்டில் போக்குவரத்து புரட்சியை ஏற்படுத்தியவர்கள். சாதாரண கிராமங்களுக்கு கூட பேருந்துகளை இயக்குகின்றனர். அரசு நிறுவனமே தொழிலாளர்களை பாதுகாக்கவில்லை என்றால் தனியார் எப்படி பாதுகாக்கும். போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையில் அரசு செவிசாய்க்க வேண்டும்.
தனியார் வருவதில் கருத்து வேறுபாடோ கொள்கை வேறுபாடோ கிடையாது. தனியார் துறை மட்டுமே நாட்டின் வளர்ச்சியை நிரூபித்து விட முடியாது. பொதுத்துறையும் வேண்டும். கலப்பு பொருளாதாரமான பொதுத்துறை, தனியார் துறையும் இணைந்து செயல்பாடுக்கு கொண்டு வந்தவர் நேரு. ஆனால் தற்போது பொதுத்துறையை அழித்து தனியார் துறைக்கு கொடுக்க விரும்புகின்றனர். இது தவறான கொள்கை.
கரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல முடியவில்லை. மாணவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பயிற்சி அளித்து வாய்ப்பு தருவது சரி” என்றார்.
இதையும் படிங்க: எங்கள் கூட்டணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கவலைப்பட வேண்டாம் - எம்பி கார்த்திக் சிதம்பரம்