தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்னது 'போரணி'யா - ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்!

சென்னை: திமுக பேரணிக்கு 108 சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தும் வெறும் ஐந்தாயிரம் பேர் கலந்துகொண்டது அக்கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

By

Published : Dec 24, 2019, 4:56 PM IST

Jayakumar
Jayakumar

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 32ஆவது நினைவுதினத்தையொட்டி சென்னை ராயபுரத்தில் வைக்கப்பட்ட அவரது புகைப்படத்திற்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் ஜெயக்குமார், "எம்ஜிஆர் மறைந்து 32 ஆண்டுகள் ஆனாலும் அவர் சமுதாயத்திற்கு செய்த தொண்டு திரைப்படத்தில் கூறிய கருத்துகள் மூலம் இன்று மட்டுமல்ல; இன்னும் பல நூறு ஆண்டுகள் மக்கள் மனதில் அழியாத சுவடுகளாக இடம் பெறுவார்.

கூட்டணிக் கட்சிகள், 108 அமைப்புகள் என அனைத்துக் கூட்டத்தையும் கூட்டிக்கொண்டு வெறும் ஐந்தாயிரம் பேர் மட்டும்தான் திமுக நடத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டனர். இது திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய தோல்வி. ஸ்டாலின் பிறந்த குழந்தையை மட்டும்தான் போராட்டத்திற்கு அழைக்கவில்லை அதற்குப் பேசத் தெரிந்தால் அதையும் போராட்டத்தில் கலந்துகொள்ள சொல்லியிருப்பார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

இந்த ஆர்ப்பாட்டத்தால் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நிறைய கான்சப்ட் கிடைத்துள்ளது. ஸ்டாலின் பேரணி சொல்வதற்குப் பதிலாகப் போரணி என்று சொல்லிவிட்டார். அது முழுவதும் ஃபெயிலியர் அணிதான்.

தமிழ்நாடு மக்கள் அமைதியாக இருக்கும் நிலையில் அவர்களைப் பிரித்து எப்படியாவது விஷ விதைகளை விதைத்து வன்முறையை அரங்கேற்றி அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காகவே இந்தப் பேரணியை நடத்தினர்" என்றார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வழிபடும் ‘அதிமுக’ பக்தர்!

ABOUT THE AUTHOR

...view details