சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் தென் பகுதியில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன்பிடிப் படகு அணையின் தளம் திறப்பு விழா மற்றும் 10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறிய மீன்பிடி படகு அணை, மீன் விற்பனை கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
காசிமேடு மீன்பிடி துறைமுகம் அடிக்கல் நாட்டு விழா -அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைப்பு
சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி படகு அமைக்கும் தளத்தை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார்.
minister jeyakkumar
சென்னை காசிமேடு துறைமுகத்தில் தினமும் இரண்டாயிரம் விசைப்படகுகள், சிறிய படகுகள் கையாளப்படுகிறது. இதனால் கடுமையான இடநெருக்கடி ஏற்படுகிறது. இதுதவிர இந்தத் துறைமுகத்திலிருந்து கடல் மட்டுமின்றி, ஆழ்கடல் மீன்பிடி பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்பால் சூரை வகை மீன்களும் அதிகம் கிடைக்கின்றன. இந்த மீனுக்கு ஏற்றுமதி தேவையும் அதிகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.