தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேல்ஸ் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு

சென்னை: வேல்ஸ் கல்விக் குழுமத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வேல்ஸ் கல்விக்குழும்

By

Published : Mar 19, 2019, 7:06 PM IST

தமிழகம் முழுவதும் உள்ள வேல்ஸ் கல்விக்குழுமத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் 27 இடங்களிலும், தெலங்கானாவில் 3 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கட்டுமான நிறுவனமொன்றில் நடந்த சோதனையை தொடர்ந்து வேல்ஸிலும் சோதனை மேற்கொள்ளப்படுவதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

ABOUT THE AUTHOR

...view details