தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாட்டரி மன்னன் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுன் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு!

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனும், அரைஸ் குழுமத்தின் நிர்வாகியுமான ஆதவ் ஆதவ் அர்ஜுன் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 25, 2023, 7:03 AM IST

சென்னை:அரைஸ் குழுமத்தின் நிர்வாகியும், தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவருமான ஆதவ் அர்ஜுன் தொடர்பான சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் இருக்கும் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் அவர் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆதவ் அர்ஜுன், பிரபல லாட்டரி மன்னன் மார்ட்டின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. லாட்டரி மன்னன் மார்ட்டின் மீது வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமலாக்கத்துறையினர் மட்டும் சுமார் 450 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கியுள்ளனர். இந்த நிலையில் அவரது மருமகன் ஆதவ் அர்ஜுன் தொடர்பான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆதவ் அர்ஜுன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது.

தேர்தலுக்காக வேலை பார்த்த பிரசாந்த் கிஷோருக்கு அடுத்தபடியாக பல்வேறு அரசியல் நகர்வுகளுக்கு ஆதவ் அர்ஜுன் உதவி வருவதாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரையும் கண்காணிக்கும் நடவடிக்கையும் ஆதவ் அர்ஜுனிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே சபரீசன் தொடர்புடையதாக கூறப்படும் ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக வருமானவரித்துறை 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வந்த நிலையில், சபரீசனின் நெருங்கிய நண்பராக கூறப்படும் ஆதவ் அர்ஜுன் தொடர்பான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு; ஜூன் 8ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

ABOUT THE AUTHOR

...view details