சென்னை:தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, நீலகிரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மண்டலத்தில், 10 மக்களவைத் தொகுதிகளும், 61 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன.
இதனுடன் அருகில் உள்ள சில தொகுதிகளையும் சேர்த்து, மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகளுடன் 'கொங்கு நாடு' என்ற பகுதியைப் பிரித்து, புதுச்சேரி போல, தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கலாம்.
மக்கள் விருப்பம்
அந்தவகையில் இதுகுறித்து பாஜக மாநிலச் செயலாளர் கரு.நகராஜன் கூறியதாவது, 'இன்று (ஜூலை 11) மத்திய அமைச்சரவையில் 2 பேர் இணை அமைச்சர்களாக பொறுப்பெற்றுள்ளார்கள். எந்த நாடு ஏற்பட வேண்டும் என்றாலும் அது மக்கள் விருப்பம் தான். அதற்கு உதாரணம் தெலங்கானா, இது குறித்து ராமதாஸ் கூட பேசி இருக்கிறார். ஒன்றிய அரசு என்று சொல்வது அவரவர் விருப்பம். கொங்கு நாடு என்று சொல்வது அந்த மக்களுடைய விருப்பம்' என்றார்.
டிடிவி தினகரன் கருத்து