மாநிலம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த ஏ.கே. விஸ்வநாதன், காவல் துறை செயலாக்கம் ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு, சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மத்திய மண்டல ஐஜியாக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய ஐஜியாக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.