தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொல்லியல் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயp படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

international institute of tamil studies

By

Published : Nov 14, 2019, 11:25 PM IST

சென்னை உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2020 - 2021ஆம் ஆண்டுக்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வு பட்டய வகுப்புகள் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது. இதில் கல்வெட்டியல், தொல்லியல், தமிழக வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்துகொள்ளவும், கல்வெட்டு படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்தப் பட்டயப் படிப்பு, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓராண்டுக்கு நடக்கும். 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது. பயிற்சி கட்டணம் 2,500 ரூபாய் ஆகும்.

இதற்கான விண்ணப்பத்தை ’www.ulakaththamizh.in’ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு ’044-22542992, 9500012272’ என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அஸ்ஸாமிலிருந்து கோவாவுக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணா

ABOUT THE AUTHOR

...view details