தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அமைதி, நல்லிணக்கத்தை ஊக்குவிக்குவிப்போம்’ - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை: சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மனிதர்களுக்குள் அமைதி, நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

By

Published : Dec 9, 2020, 2:23 PM IST

1950ஆம் ஆண்டுமுதல் மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ஆம் தேதி கொண்டாப்படுகிறது. மனிதர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தத் தினத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”சர்வதேச மனித உரிமைகள் தினத்தில், மனிதனின் மதிப்பையும், கண்ணியத்தையும் மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சியில் தமிழ்நாடு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். நமது அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றைப் பெறுவதாக உறுதியளிக்கிறது. இது சகோதரத்துவத்தை ஊக்குவிக்கிறது. தனிநபரின் கவுரவத்தையும், தேசத்தின் ஒற்றுமையையும் உறுதிப்படுத்துகிறது.

இந்தத் தினத்தில் மனிதர்களை மதித்து மனித உரிமைகளை நிலைநிறுத்தி வளமான எதிர்காலத்தை தொடங்க அமைதி நல்லிணக்கத்தை ஊக்குவிக்க தீர்மானிப்போம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details