தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: முதுகலை மருத்துவப் பட்டப்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

By

Published : Sep 2, 2020, 4:04 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில், மாநிலத்திற்கான 50 விழுக்காடு இடங்களில் உள் ஒதுக்கீடாக 50 விழுக்காடு இடங்களை தமிழ்நாடு அரசில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு வழங்கும் நடைமுறை பல காலமாக தமிழ்நாட்டில் இருந்து வந்தது.

இந்த நடைமுறையை பாதிக்கும் விதத்தில், இந்திய மருத்துவக் குழுமம் (MCI), முதுநிலை மருத்துவ கல்வி ஒழுங்குமுறைகளை வெளியிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு இந்த வழக்கினை ஆதரித்து மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில் தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள உள் ஒதுக்கீட்டு முறையே தொடர வேண்டும் என்று ஆணித்தரமாக வாதாடியது.

இவ்வழக்கில், ஆகஸ்ட் 31ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புரையில், “மாநில அரசுகள் மருத்துவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது, முதுநிலை மருத்துவ கல்வி ஒழுங்கு முறைகளுக்கு எதிரானது அல்ல என்றும், எனவே அரசு மருத்துவர்களுக்கு மாநில அரசுகள் முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கலாம்” என்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

ஊரகப் பகுதி மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் மருத்துவ சேவையாற்றுகின்ற நமது அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில் வழங்கப்பட்டு வந்த உள் ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் மூலம், உரிமையை நிலைநிறுத்தியது தமிழ்நாடு அரசுதான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details