தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுதந்திர தினத்தின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பள்ளிகளில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி இயக்கம்
பள்ளிக்கல்வி இயக்கம்

By

Published : Jul 31, 2020, 5:27 PM IST

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தை (ஆகஸ்ட் 15) பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்கள், பள்ளிகளில் எளிய முறையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சுதந்திர தின விழாவினை தகுந்த இடைவெளியை பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடுதல் வேண்டும்.
அனைத்து வகை பள்ளிகளிலும் தேசியக் கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுதல் வேண்டும். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் முன் களப்பணியாளர்கள் ஆக செயல்படும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் பொருட்டு அவர்களை விழாவிற்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும்.
கரோனா தொற்று ஏற்பட்டு தற்போது பூரண குணமடைந்து நபர்களையும் விழாவிற்கு அழைக்கலாம். சுதந்திர தின விழாவின்போது கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளான தகுந்த இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கூட்டங்களை தவிர்த்தல் வேண்டும்.
கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வசதி ஏற்படுத்துதல், கோவிட் - 19 சார்பான சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details