தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கத்தாரில் இருந்து 146 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

சென்னை: கத்தாா் நாட்டில் சிக்கித் தவித்த 146 இந்தியா்கள் சிறப்பு தனி விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனா்.

இந்தியர்கள் மீட்பு
இந்தியர்கள் மீட்பு

By

Published : Jun 11, 2020, 5:12 PM IST

கத்தாா் நாட்டில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த இந்தியா்கள் பலா், நாடு திரும்ப முடியாமல் மூன்று மாதங்களாக தவித்து வந்தனர். இதனால், அவா்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துவந்தனா். இதையடுத்து, அங்குள்ள இந்திய தூதரக அலுவலர்கள் தொழிலாளர்களை பத்திரமாக நாடு திரும்ப ஏற்பாடு செய்தனா்.

அதன்படி, இன்று (ஜூன் 11) அதிகாலை 2.50 மணியளவில் கத்தாா் நாட்டின் தோகாவிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு தனி விமானத்தில் 146 இந்தியா்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனா். விமான நிலையத்தில் அரசு அலுவலர்கள் அவா்களை வரவேற்றனா். பின்னர், அனைவருக்கும் மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடந்தன.

அதையடுத்து, அவா்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அலுவலர்கள் செய்தனா். அவா்களில் 122 போ் இலவச தங்கும் இடத்திற்கும், மீதமுள்ள 24 போ் கட்டணம் செலுத்தும் தங்கும் இடத்திற்கும் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details