சென்னையில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் மட்டும் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும் நோய்த்தொற்று குறையாமல் இருக்கும் குறிப்பிட்ட பகுதிகளான தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் போன்ற இடங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மொத்தம் 1 லட்சத்து ஆயிரத்து 951 நபர்கள் இந்த கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 87ஆயிரத்து 804 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 12 ஆயிரத்து 190 நபர்கள் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். குணமடைந்தவரின் விழுக்காடு அதிகரித்து வருவதால் மக்களிடையே ஒரு மன நிம்மதி ஏற்பட்டுள்ளது.
11 மண்டலங்களில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் உள்ளது. அண்ணா நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், அடையாறு நான்கு மண்டலங்களில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மண்டல வாரியாக சிகிச்சைப் பெற்று வருபவர்களின் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி,கோடம்பாக்கம் - 1,394 பேர்,
அண்ணா நகர் - 1,288 பேர்,
ராயபுரம் - 837 பேர்,
தேனாம்பேட்டை - 918 பேர்,
தண்டையார்பேட்டை - 666 பேர்,