தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழைய இரும்புக் கடை வியாபாரிக்கு ட்விஸ்டு வைத்த வருமான வரித்துறையினர்: 17 லட்சம் ரூபாய் பறிமுதல்

சென்னை: பழைய இரும்பு வியாபாரியின் வீடு, கடையில் வருமான வரி அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

income tax ride in steel merchant house in chennai
வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை

By

Published : Mar 14, 2021, 2:25 PM IST

சென்னை, ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பழைய இரும்புக் கடை, எடை மேடை உள்ளிட்ட தொழில் செய்து வருபவர் சரவணன் (45). இவர் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலர்களுக்கு புகார் வந்தது.

இதனையடுத்து வருமானவரித் துறை துணை ஆணையர் அனில்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட அலுவலர்கள் குழு நேற்று (மார்ச்.13) மாலை ஆவடிக்கு விரைந்து, சரவணனின் வீடு, கடை, எடை மேடை ஆகிய தொழில் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனை மாலை ஐந்து மணி முதல் அதிகாலை வரை நடைபெற்றது.

அப்போது, கடைகளில் இருந்த ஆவணங்கள் உள்பட வீட்டில் இருந்த 17 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உரிய ஆவணங்களைக் கொடுத்து விட்டு கைப்பற்றப்பட்ட பணத்தை திரும்ப வாங்கிச் செல்லுமாறு சரவணனிடம் வருமான வரித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:கையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியுமா?

ABOUT THE AUTHOR

...view details