தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெர்கன்டைல் வங்கி சோதனையில் திடுக்கிடும் தகவல்..! கணக்கில் வராத 4410 கோடி ரூபாய் கண்டுபிடிப்பு..!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் சுமார் 4ஆயிரத்து 410 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டாமல் வைத்திருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

மெர்கண்டைல் வங்கி சோதனையில் திடுக்கிடும் தகவல்
மெர்கண்டைல் வங்கி சோதனையில் திடுக்கிடும் தகவல்

By

Published : Jun 30, 2023, 10:31 PM IST

சென்னை:தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி இயங்கி வருகிறது. இதில், ஜூன் 27ஆம் தேதி வருமான வரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஐந்து வருடத்தில் வங்கியில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் டைம் டெபாசிட், மக்களுக்கு வழங்கப்படும் வட்டி ஆகியவை குறித்து முறையாக கணக்கு காண்பிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நிர்வாகத்திடம் பலமுறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் நிர்வாகத்திடம் இருந்து முறையான பதில் ஏதும் அளிக்கப்படாததால் வங்கியில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் மெர்கன்டைல் வங்கி அலுவலக ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஜூன் 27 முதல் ஜூன் 28 காலை வரை விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு வருமான வரித்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது 4ஆயிரத்து 410 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

ரொக்க முதலீட்டில் பத்தாயிரம் வங்கி கணக்குகளில் 2700 கோடி ரூபாய் தொகையும், கிரெடிட் கார்டு தொடர்பான கணக்கு காட்டுதலில் 110 கோடி ரூபாயும், டிவைடெண்ட் முதலீட்டில் 200 கோடியும் மற்றும் பங்குகளில் 600 கோடியும், பொதுமக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய வட்டிகளில் 500 கோடி ரூபாயும் கணக்கு காட்டப்படவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜியின் பதவிநீக்கம் நிறுத்தி வைப்பு; ஆளுநரின் முடிவில் திடீர் மாற்றம் எதனால்?

ABOUT THE AUTHOR

...view details