இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமஸ்கிருத மொழி என்பது எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. காரணம், அதற்கு எழுத்தே கிடையாது. சடங்குகளின்போது உதிர்க்கப்படும் ஒலி வடிவம், அவ்வளவே.
சமஸ்கிருதத்தில் நூல்கள் இருப்பதாகச் சொன்னாலும் வேறு மொழி எழுத்தில்தான் அவை இருக்கும். ஆகவே அது யாருக்கும் தாய்மொழியாக இல்லாத ஒரு மொழி என்பதுதான் உண்மை.
சமஸ்கிருத ஒலி வடிவத்திலிருந்தும் வேறு சில மொழிகளிலிருந்தும் உண்டாக்கப்பட்ட மொழிதான் இந்தி. அதிலும்கூட போஜ்புரி இந்தி, ராஜஸ்தானி இந்தி, சட்டீஸ்கரி இந்தி எனப் பல வகைகள் உள்ளன. பொதுவான இந்தி என்று ஒன்றே கிடையாது. ஆனால் பலவித இந்தி பேசுவோரையும் சேர்த்துக் கூட்டி, இந்தி பேசுவோர்தான் அதிகம் பேர் என்று கதை கட்டுகின்றனர்.
அப்படிப் பெரும்பான்மையோர் பேசாத இந்தி, ஆட்சிமொழி கிடையாது. ஆங்கிலத்தோடு இந்தியும் ஓர் அலுவல் மொழிதான். அதைத் திணிக்கப் பார்த்து, அதற்கெதிராகக் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெரும் போராட்டமே ஏற்பட்டு விரட்டியடிக்கப்பட்டது.