தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியலில் வெற்றிடமே கிடையாது- பாரிவேந்தர் எம்.பி - IJK president recent press meet

சென்னை: அரசியலில் வெற்றிடமே கிடையாது என ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் எம்.பி தெரிவித்துள்ளார்.

IJK president Paarivendhar

By

Published : Nov 16, 2019, 1:40 AM IST

ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருவாரூர் மாவட்டம், காட்டூர் கிராமத்தில் அமையவுள்ள கருணாநிதி மணிமண்டபத்திற்காக எனது ஒரு மாத சம்பளத்தை கொடுப்பதற்காக வந்தேன். அப்போது தொகுதியில் மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை ஸ்டாலினிடம் தெரிவித்தேன்.

என்னை பொருத்தவரை உள்ளாட்சி தேர்தல் வருமா, வராதா என்ற சந்தேகம் உள்ளது. தொகுதிகள் சரியாக வரையறுக்கப்படவில்லை, எனவே வராது என்பதுதான் என்னுடைய கருத்து என்றார்.

செய்தியாளர்களை சந்திக்கும் ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர்
தொடர்ந்து பேசிய அவர், என்னுடைய பார்வையில் ஐஐடிகளில் பாடத்திட்டங்கள் கடுமையாக உள்ளதால், தோல்வியடையும் மாணவர்கள் பெற்றோருக்கு என்ன சொல்வது என்ற குற்ற உணர்வுகளிலேயே தற்கொலை செய்து கொள்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வெற்றிடம் பற்றி கருத்துக்கு பதில் அளிக்கையில், அரசியல் வெற்றிடம் என்ற வார்த்தைக்கே விளக்கம் இல்லை. தவறாக வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் என்றார்.

இதையும் படிங்க: ‘ரஜினியின் கருத்தை வழிமொழிவதைத் தவிர வேறு வழியில்லை’ - கமல் ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details