சென்னை:நேரத்தைச் செலவு செய்வதைவிட அதனை முதலீடு செய்வது சிறந்தது. தொலைபேசி என்பது மனிதனின் நெடுந்தூர பயணத்தை தவிர்க்கவும், சரியான நேரத்தில் செய்தியைக் கடத்தவும், நேரத்தைச் சேமிக்கவுமே கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால் அதன் பயன்களை தவறாக புரிந்துகொள்ளும் நாம், அதனை பொழுதுபோக்குக்கான ஒரு கருவியாக எண்ணி நம் தினசரி வேலைகளையும் கூட கைவிட்டு ஸ்மார்ட்போனில் மூழ்கிவிடுகிறோம். வாழ்க்கைக்கான கனவுகளில் தொலைய வேண்டிய இளைஞர்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ் ஆப், இன்ஸ்டகிராம், யூடியூப் இல் தொலைவது வேதனையானது.
ஆனால் ஒரு சிலர் தெளிவாக, அறிவியலின் நோக்கம் அறிந்து அதனை அந்த தேவைக்காக மட்டும் பயன்படுத்துவதில் தங்கள் கனவுகளை வாழ்ந்து வருகின்றனர். நீங்களும் ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்ற விரும்புகிறவர்களாக இருந்தால் இதனை சரியாக பின்பற்றுங்கள் போதும்..
அதிக விழிப்புணர்வு:முதலில் ஸ்மார்ட்போனை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள், இதனால் உங்கள் தினசரி வாழ்க்கையில் எந்த அளவு இடையூறுகள் ஏற்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். பெற்றோர் உறவினர் உடனான உறவை எப்படிப் அது பாதிக்கிறது என்பதை கவனித்து அவர்களுடனான சந்திப்பின் போது தொலைப்பேசியை வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்லலாம்.
சரியான இலக்கை அமைத்துக்கொள்ளுதல்: முடிந்தவரை ஸ்மார்ட்போன் பார்க்கும் நேரத்தை (screen time) குறைத்துக்கொள்வது நல்லது. எப்படி? வேலை செய்யும் நேரங்களிளும், தூங்கச் செல்லும் நேரங்களிளும் ஸ்மார்ட்போனை சைலண்ட் மோடில் (silent mode) போடலாம். அன்றைய வேலைகளை எழுதி வைத்துக்கொண்டு அதனை மேற்கொள்ளலாம்.
கண்காணிப்பு செயலிகளைப் பயன்படுத்துதல்:நாம் தினசரி எவ்வளவு நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறோம் என்பதை கண்காணிக்க பல ஆன்லைன் செயலிகள் (online apps) வந்துவிட்டது. அதனை பதிவிறக்கம் செய்து அதில் நேரத்தை செட் செய்வதன் மூலம் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் தானாகவே எச்சரிக்கையை (Alert) பெறமுடியும். இதன் மூலம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை படிப்படியாக குறைத்துக் கொள்ளலாம்.