மாமல்லபுரத்தை நிரந்தரமாகப் பாதுகாக்கக்கோரி கடந்த 1ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வினீத் கோத்தாரிக்கு நீதிபதி கிருபாகரன் கடிதம் அனுப்பியிருந்தார். அதில்,
- "மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவற்றை 'லைட்டிங் ஷோ'விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
- புராதன சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
- மாமல்லபுரத்தில் குப்பை போடுவதை குற்றமாக்கி குறைந்த பட்சம் ஆயிரம் அபராதம் வசூலிக்க வேண்டும்.
- சீன அதிபர் வருகையின்போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- வெளிநாட்டுச் சுற்றுலாப் பணிகளின் வசதிக்காக ஆங்கிலப் புலமை பெற்ற காவல் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.
- சுகாதாரமான உணவு, குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
- மாமல்லபுரத்தை புராதன கிராமமாக அறிவித்து அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்ட நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு, தமிழ்நாட்டின் பெருமையாகக் கருதப்படும் மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தனர்.