சென்னை: ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை உலக அளவில் இந்தியாவில் தான் அதிகம் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலோடு பல்வேறு வழிகாட்டுதல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும், இன்று வரை இதை முழுமையான கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பது சவாலாகத்தான் உள்ளது. இதற்கு இடையேதான் சென்னையில் வெறி நாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 5 ரேபிஸ் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.
இருந்தபோதிலும், பலருக்குச் சந்தேகம் எழலாம்.. ரேபிஸ் தடுப்பூசிப் போட்டுக்கொண்டால் போதுமானதா? ரேபிஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? என. ஆம் ரேபிஸ் தடுப்பூசிப் போட்டுக்கொண்டால் 100 சதவீதம் ரேபிஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:வேகமாகப் பரவும் இன்புளூயன்சா ஃபுளூ.. இணை நோய் உள்ளவர்களுக்கு அதிக கவனம் தேவை.!
மேலும் வெறி நாயோ அல்லது சாதாரண நாயோ எதுவாக இருந்தாலும் சரி நாய் கடித்தால் உடனடியாக காயம் பட்ட இடத்தை சோப்பால் நன்றாகக் கழுவி விட்டு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதே பரிந்துரை. மருத்துவர் பரிசோதனைக்குப் பிறகு தடுப்பூசி எத்தனை டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துவார்.
ரேபிஸ் ஊசி குறிப்பிட்ட டோஸ் போடாமல் விட்டால் என்ன ஆகும்?நீங்கள் நாய் கடியாலோ அல்லது பூனை உள்ளிட்ட வேறு விலங்குகளின் கடிக்கோ பாதிக்கப்பட்டு ரேபிஸ் ஊசி போடப் பரிந்துரைக்கப்பட்டால், எத்தனை டோஸ் ஊசிகள் போட வேண்டும் எனவும் எந்தெந்த கால இடைவெளியில் போட வேண்டும் என்றும் மருத்துவர் பரிந்துரைக்கிறாரோ.. அதைச் சரியாகக் கவனத்தில் வைத்துப் போட்டுக்கொள்ள வேண்டும்.