தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘போராட்டத்திற்கு பயந்தே இந்தி பேசும் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது’ -  கண்ணையா

சென்னை: போராட்டம் நடத்துவோம் என்று கூறியதாலே இந்தி பேச வேண்டும் என்ற உத்தரவை தென்னக ரயில்வே திரும்பப் பெற்றதாக எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தின் செயல் தலைவர் கண்ணையா தெரிவித்துள்ளார்.

srmu

By

Published : Jun 14, 2019, 7:57 PM IST

எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தின் செயல் தலைவர் கண்ணையா சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசக்கூடாது என தென்னக ரயில்வே உத்தரவிட்ட விபரம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன், முதன்மை ஆப்ரேட்டிங் அலுவலரிடம் அந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என மனு அளித்தோம். அதில் தமிழ் மட்டுமே தெரிந்த பயணிகள் ரயில்நிலைய அலுவலரிடம் இந்தி மட்டுமே பேச வேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தோம். இந்த உத்தரவை ரத்து செய்யாவிட்டால் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் குறிபிடப்பட்டது.

எஸ்.ஆர்.எம்.யூ செயல் தலைவர் கண்ணையா செய்தியாளர் சந்திப்பு

அந்த மனுவின் அடிப்படையில் இன்று காலை 11.30 மணிக்கு இந்தி பேசும் உத்தரவை தென்னக ரயில்வே திரும்பப் பெற்றுள்ளது. மேலும், அந்தந்த மாநில மொழிகளை பேசும் ஊழியர்களை அவரவர் மாநிலங்களில் பணியமர்த்தல் வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளளோம்” என்று அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details