சென்னை:தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் 99.7 விழுக்காடு கோயில்களில் அறங்காவலர்கள் இல்லை எனவும் அரசு அதிகாரிகள் தக்கார்களாக நியமிக்கப்பட்டுள்ளதால், அவர்களை நீக்க உத்தரவிட வேண்டும் என திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்ககராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு சிறப்பு அமர்வில் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி அமர்வு, அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான மூன்று வழக்குகளை சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதேபோல, அறங்காவலர்கள் இல்லாத கோயில்களில் உண்டியல்களை கையாள தக்கார்களுக்கு தடை விதிக்க கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாததால் இரு சாவிகளையும் கோயில் தக்கார்கள் வைத்திருப்பதாக கூறியிருந்தார்.