சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் தெருவில் வழக்கறிஞர் அலுவலகம் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரின் செல்ஃபோன் எண்ணை வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றில் சேர்த்துள்ளார். பின்னர் அக்குழுவில் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே அந்த ஆபாச குரூப்பில் இருந்து வெளியேறினார்.
பெண் வழக்கறிஞருக்கு செல்ஃபோனில் ஆபாச வீடியோ அனுப்பி தொந்தரவு-இளைஞருக்கு வலைவீச்சு
சென்னை: பெண் வழக்கறிஞரின் கைபேசிக்கு ஆபாச வீடியோ அனுப்பி தொந்தரவு கொடுத்த இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பெண் வழக்கறிஞருக்கு செல்போனில் ஆபாச வீடியோ அனுப்பி தொந்தரவு-இளைஞருக்கு வலைவீச்சு
ஆனால் அடையாளம் தெரியாத நபர், மீண்டும் குரூப்பில் எண்ணை இணைத்துள்ளார். இதனால் அச்சமடைந்த வழக்கறிஞர், அடையாளம் தெரியாத நபரை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் துறையினர், அந்த எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:மே 2 அன்று முழு ஊரடங்கு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு