இந்தியா முழுவதும் கரோனா தொற்று அதிதீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இதனால் முகக்கவசம், சானிடைசர் போன்ற பாதுகாப்பு பொருள்களை மக்கள் வாங்கி வருகின்றனர். மக்களின் அச்சத்தைப் பயன்படுத்தி இப்பொருள்களின் தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் அதிக விலைக்கு விற்பதற்காக சிலர் பதுக்கி வைத்து வருகின்றனர். அவ்வாறு பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
மாஸ்க், சானிடைசரை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும்! - அரசு எச்சரிக்கை
சென்னை: முகக்கவசங்கள், சானிடைசர் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
gundas-enacted-if-the-mask-and-sanitizer-sells-high-rate
முன்னதாக, இவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. மேலும் முகக்கவசத்துக்கான விலையை 8 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரையிலும், 200 மிலி சானிடைசரின் விலை 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யலாம் என மத்திய அரசு கூறியது.