சென்னைசிறு - குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எளிதான நடைமுறை மூலதனத்தை வழங்கத் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் உடன் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு தொழிற்சாலை கூட்டுறவு வங்கி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்கள் எளிதில் கடன் பெற வசதியாகத் தொழில் முதலீட்டு கழகம் மற்றும் தாய்கோ வங்கி இணைந்து எளிமையான முறையில் கடன் வழங்கும் வகையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
தொழில்துறை உள்கட்டமைப்பு முன்னெடுப்பு
இந்த நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், " தமிழ்நாடு சிட்கோ உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி மாநிலத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வண்ணம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமானது தொழில்துறை உள்கட்டமைப்பு முன்னெடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.