தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நல்லம நாயுடு வீட்டில் ஏழு சவரன் தங்க நகை திருட்டு

பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மறைந்த காவல் அலுவலர் நல்லம நாயுடு வீட்டில் ஏழு சவரன் தங்க நகை திருடுபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஏழு சவரன் தங்க நகை திருட்டு
ஏழு சவரன் தங்க நகை திருட்டு

By

Published : Dec 4, 2021, 11:41 AM IST

சென்னை:ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அலுவலராகத் தீவிரமாகச் செயல்பட்டவர்மறைந்த காவல் அலுவலர்நல்லம நாயுடு.பெரியார் நகர் சந்திரசேகரன் சாலை பகுதியில் வசித்துவந்த இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நவம்பர் மாதம் 16ஆம் தேதி காலமானார்.

அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள குப்பிநாயக்கன்பட்டியில் அடக்கம்செய்யப்பட்டது. இறுதிச் சடங்குக்காக மகன் சரவணன், குடும்பத்தினர் தேனியில் இருந்துவருகின்றனர்.

இதனால் சென்னையில் உள்ள அவரது வீடு பூட்டிய நிலையில் உள்ளது. இதனிடையே நேற்று (டிசம்பர் 3) மதியம் 12 மணி அளவில் சரவணனின் உறவினர் பிரனிடா என்பவர் வீட்டைச் சுத்தம் செய்ய சென்றுள்ளார்.

வீட்டின் கதவுகளிலிருந்த பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சரவணனுக்குத் தகவல் தெரிவித்தார். சரவணன் தனது உறவினரான ஆசைத்தம்பியிடம் கூறி வீட்டிற்குச் சென்று பார்க்கக் கூறியுள்ளார்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உள்ளிட்ட பொருள்கள் உடைக்கப்பட்டிருந்தன. உடனடியாக இது குறித்து பெரவள்ளூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்தகவலின்பேரில் அங்குச் சென்ற காவலர்கள் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் வீட்டிலிருந்த ஏழு சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் திருடுபோயிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:செல்போன் கடை உரிமையாளருக்கு சரமாரி வெட்டு - மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details