தனியார் பள்ளிகள் கட்டணம் விவகாரம்: அரசின் உத்தரவு சுற்றறிக்கை அனுப்பப்படும்
சென்னை: தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பு விவகாரத்தைப் பொறுத்தவரை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முடிவை தெரிவித்த பிறகு உரிய அறிவுறுத்தல்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்றும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கட்டணங்களை கேட்டு வற்புறுத்தி வருவதாகத் தொடர்ந்து இயக்குனர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்து வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரக அலுவலர் ஒருவர் கூறும்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் குறித்த வழக்கு நாளை( ஜூலை 17 )விசாரணைக்கு வருகிறது.
அப்போது தமிழ்நாடு அரசு தன் முடிவைப் பதிலாக தாக்கல் செய்கிறது. எனவே நாளை வரை தனியார் பள்ளிகள் அமைதி காக்க வேண்டும். அரசு தன் முடிவை தெரிவித்தப் பிறகு, அரசின் உத்தரவு சுற்றறிக்கையாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும் என்று கூறினார்.