சென்னை: கடந்த 2006ஆம் ஆண்டு தனியார் வங்கியொன்றின் முகப்பேர் கிளையில், ஸ்கார்பியோ கார் வாங்க ரூபாய் 3 லட்சம், ஹூண்டாய் கார் வாங்க ரூபாய் 4 லட்சம், குவாலிஸ் கார் வாங்க ரூபாய் 4.5 லட்சம் கடன் வாங்கிவிட்டு கார்கள் வாங்காமலேயே இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியை ஏமாற்றியுள்ளனர்.
5 பேர் மீது வழக்கு
இது தொடர்பாக நல்லூரைச் சேர்ந்த சுந்தரம், அவரது மனைவி சபிதா தேவி, அவர்களது கூட்டாளிகளான மடிப்பாக்கத்தை சேர்ந்த வித்யகுமார், ராமநாதபுரத்தைச் சேர்ந்த நித்யகுமார், நங்கநல்லூரை சேர்ந்த திருப்பதி ராஜா ஆகிய ஐந்து பேர் மீது சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் மோகன சுந்தரம் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு காவலர்கள் புலன் விசாரனை மேற்கொண்டு, சுந்தரம் மீது மூன்று வழக்கும், வித்யாகுமார் மீது இரண்டு வழக்கும், சபிதா தேவி, திருப்பதி ராஜா, நித்யகுமார் ஆகிய மூவர் மீதும் தலா ஒரு வழக்கும் பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்தனர்.