தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழமை வாய்ந்த 4 உலோக சிலைகள் பறிமுதல்

கும்பகோணம் மெளனசாமி மடத்தில் ரகசிய அறையில் மறைத்து வைத்திருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான்கு உலோக சிலைகள் மற்றும் தஞ்சை ஓவியம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பழமைவாய்ந்த நான்கு உலோக சிலைகள் பறிமுதல்
பழமைவாய்ந்த நான்கு உலோக சிலைகள் பறிமுதல்

By

Published : Nov 24, 2022, 11:43 AM IST

சென்னை: கும்பகோணம் மெளனசாமி மடத்தெருவில் உள்ள மௌனசாமி மடத்தில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக இந்து முன்னணியை சேர்ந்த ராம் நிரஞ்சன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அப்புகாரின் பேரில் மடத்தை சோதனை செய்வதற்கு நீதிமன்றத்தை நாடி உரிய அனுமதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பெற்றனர். நேற்று காலை மடத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது மடத்தின் ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உலோக விநாயகர் சிலை, நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, பாலதண்டாயுதபாணி சிலை மற்றும் புகழ்பெற்ற 63 நாயன்மார்களின் தஞ்சை ஓவியம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

தஞ்சை ஓவியம்

மடத்தில் உள்ள நிர்வாகிகளிடம் உரிய ஆவணம் இல்லாத காரணத்தினால் அதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகள் முன்னோர்கள் காலத்திலிருந்தே வைத்திருப்பதாக மடத்தின் நிர்வாகி தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்டவை 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சிலைகள் தமிழ்நாடு கோயில்களில் இருந்து திருடப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குளுகுளு சென்னை: அதிகளவிலான பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

ABOUT THE AUTHOR

...view details