தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுக'- முன்னாள் அமைச்சர் தங்கமணி

மின்சாரக் கட்டணம் கணக்கிடும் முறை மாதம் ஒரு முறையாக மாற்றியமைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி
முன்னாள் அமைச்சர் தங்கமணி

By

Published : Jul 20, 2021, 1:30 PM IST

சென்னை: இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் நேரத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு திமுகவினர் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள்.

அதில் முதன்மையானது வீடுகளுக்கான மின் பயன்பாட்டுக் கணக்கெடுப்பை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையில் இருந்து, மாதம் ஒரு முறையாக மாற்றி அமைக்கப்படும் என்பது.

செயற்கையான மின் வெட்டு

கரோனா ஊரடங்கால் குறைவான மின்சாரத்தை உபயோகப்படுத்தி இருந்தாலும், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை, தற்போதைய திமுக ஆட்சியாளர்கள் செயற்கையான மின் வெட்டை ஏற்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

பொருளாதார சுமை

ஊரடங்கு காலத்தில் மக்கள் உரிய வருமானம் இன்றி தவித்து வரும் சூழ்நிலையில், மின்சார கட்டண உயர்வு மேலும் மக்களுக்கு பொருளாதார சுமையை ஏற்படுத்தும்.

எனவே, மின்சாரக் கட்டணம் கணக்கிடும் முறையை திமுக மாதம் ஒரு முறையாக மாற்றியமைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இந்திய பண்பாட்டு பரிணாம ஆய்வுக் குழு மாற்றியமைக்கப்படும்- சு. வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு

ABOUT THE AUTHOR

...view details