சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.
இந்நிலையில், "பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது ஒன்றிய அரசின் கடமை. ஜிஎஸ்டி வரி செயல்பாட்டில் சிக்கல்கள் உள்ளன.
பெட்ரோல், டீசல் வரி உயர்வால் ஒன்றிய அரசுக்கு 69 விழுக்காடு வருவாய் அதிகரித்துள்ளது. மாநிலங்களுக்கு குறைந்த அளவே வரி வருவாய் பிரித்து அளிக்கப்படுகிறது" என பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்து, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழ்நாடு இ-பட்ஜெட் 2021-2022: செய்திகள் உடனுக்குடன்...