கடந்த இரண்டு நாட்களாக நடிகர், நடிகைகள் 'ஹிந்தி தெரியாது போடா' மற்றும் 'ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்' என்ற வாசகங்கள் பொறித்த டி- சர்ட்களை அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதால், பல்வேறு தரப்பில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி சர்ச்சை ஆகியுள்ளது.
உண்மையான தமிழ்ப்பற்று இருந்தால் போராடுங்கள்- இயக்குநர் பேரரசு
சென்னை: உங்களுக்கு உண்மையான தமிழ்ப்பற்று உண்டென்றால், தனியார் பள்ளிகளில் கட்டாய தமிழ்ப் பாடத்திற்கு போராடுங்கள் என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பிற்கு எதிராக இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் பிரச்னை தொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றை இயக்குநர் பேரரசு பதிவு செய்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, 'நீங்கள் இந்தி படிக்காததால் இந்தி அழிந்துவிடப் போவதில்லை. உங்கள் சந்ததி தமிழ் படிக்கவில்லை என்றால் தமிழ் அழிந்துவிடும். உங்களுக்கு உண்மையான தமிழ்ப்பற்று உண்டென்றால், தனியார் பள்ளிகளில் கட்டாய தமிழ்ப் பாடத்திற்கு போராடுங்கள்' என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு ஏராளமானவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.