தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண்மண்டல சட்டத்தை அனைவரும் வரவேற்பார்கள் -எடப்பாடி பழனிசாமி!

சென்னை: வரலாற்று சிறப்பு மிக்க வேளாண்மண்டல சட்டத்தை தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் வரவேற்பார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

By

Published : Feb 20, 2020, 10:11 PM IST

வேளாண்மண்டல சட்டத்தை அனைவரும் வரவேற்பார்கள் -எடப்பாடி பழனிசாமி!
வேளாண்மண்டல சட்டத்தை அனைவரும் வரவேற்பார்கள் -எடப்பாடி பழனிசாமி!

சட்டப்பேரவையில் வேளாண் பாதுகாப்பு சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அது குறித்து பேசினார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சட்டத்தை விவசாயியாக இருந்து அறிமுகப்படுத்துவதில் மிகவும் பெருமைபடுகிறேன் என்று கூறினார்.

இந்த சட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், கடந்த 10ஆம் தேதி இந்த சட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு பதில் வந்ததா? எனவும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சட்ட முன்வடிவு அனுமதி தரும் வகையில் உள்ளது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல இந்த சட்டத்தில் திருச்சி, அரியலூர், கரூர் மாவட்டங்கள் விடுபட்டதற்கான காரணங்கள் என்ன? இந்த சட்டத்தில் உள்ள குழுவில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறாதது ஏன் எனவும் கேள்வி அனுப்பிய மு.க. ஸ்டாலின், இந்த சட்டம் முழுமையாக விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றால் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உணவுப்பாதுகாப்பை உறுதிபடுத்தவும், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும், அறிவிப்பு வெளியிட்ட மறுதினமே மத்திய அரசுக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியதாக தெரிவித்தார். அதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கியிருப்பதாக மத்திய அரசு பதில் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் அறிவிக்கப்பட்டு பத்து நாட்களுக்குள் சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து சட்டத்தை கொண்டு வந்திருப்பதாகவும், ஏற்கனவே உள்ள திட்டங்களை தடை செய்தால் சட்ட சிக்கல்கள் வரும் என்பதால் இந்த சட்டமுன்வடிவை தற்போது கொண்டு வந்திருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எதிர்கட்சித்தலைவர், வேளாண் மண்டல சட்டத்திற்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும், இருப்பினும் விவசாயிகளுக்கு முழு பாதுகாப்பு வேண்டுமென்றால் இதனை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி விவாதிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர், திருச்சி, கரூர் அரியலூர் மாவட்ட விவசாயிகள் பிரதிநிதிகளாக மாவட்டக்குழுவில் இடம்பெறுவார்கள் எனவும் மேற்கண்ட மாவட்டங்களில் சில வட்டங்கள் டெல்டா பகுதிகளில் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க...‘எரிமலை ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்’ - வைகோ காட்டம்

ABOUT THE AUTHOR

...view details