தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 4pm

ஈடிவி பாரத்தின் 4 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-4-pm
etv-bharat-top10-news-4-pm

By

Published : May 27, 2020, 3:53 PM IST

உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை நிறுவியவர் நேரு - ராகுல் காந்தி புகழாரம்

தொலைநோக்கு பார்வை கொண்ட நேரு, உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை நிறுவினார் என ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

டெல்லியில் ராணுவ உயர்மட்ட குழு முக்கிய ஆலோசனை

இந்தியா - சீனா எல்லைப்பகுதியான லடாக்கில் ராணுவக் குவிப்பு நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ள நிலையில், இந்திய ராணுவத் தளபதி எம்.எம். நரவனே தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது.

வேதா இல்லம் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தினை அரசு நினைவில்லமாக மாற்றுவது தொடர்பான வழக்கு இன்று காணொலி காட்சி மூலம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தவை குறித்து விரிவாகக் காணலாம்.

199 பேருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வாழ்நாள் தடை!

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 191 பேர் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் வகுப்புகள் நடத்தலாமா? - அமைச்சரின் மாறுபட்ட பதில்களால் குழப்பம்!

சென்னை: தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாமா என்பது பற்றி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

மூட நம்பிக்கையின் உச்சம்: ஜோதிடரின் பேச்சை கேட்டு கர்ப்பிணியை உதைத்த கணவர்...! கலைந்தது கரு...!

ஈரோடு: அம்மாபேட்டை அருகே குழந்தை பிறந்தால் உயிருக்கு ஆபத்து என ஜோதிடர் கூறியதால் கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளிகள் வருமா ? - வேளாண் துறை விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளிகள் படையெடுப்பதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என வேளாண் துறை விளக்கம் அறித்துள்ளது.

உங்கள் செயல் முன்மாதிரி சோனு - அஜய் தேவ்கன் வாழ்த்து

குடிபெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் நடிகர் சோனு சூட்டின் செயலை நடிகர் அஜய் தேவ்கன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் பவுன்சர் பந்துகளுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - அக்தர்!

ஒருநாள் போட்டிகளில் விதிக்கப்பட்டுள்ள பவுன்சர் பந்துகளுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

சீரான வானிலை... இன்று மாலை விண்வெளிக்கு பறக்கவிருக்கும் ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்

வாஷிங்டன்: வானிலை சீரானதால் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதல் இன்று மாலை 4.33 மணிக்கு திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details