தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்தி சுருக்கம்

etv bharat top ten news three news
etv bharat top ten news three news

By

Published : Jan 26, 2021, 3:01 PM IST

தமிழ்நாட்டில் குடியரசு தின விழா!

நாட்டின் 72ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

சென்னை: விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு, குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

சென்னையில் குட்கா கடத்தல்: இளைஞர் கைது!

சென்னை: சரக்கு வாகனத்தில் குட்கா கடத்தி வந்த இளைஞரை, பல மணி நேர தேடுதலுக்கு பிறகு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பத்ம விருதுகளில் ஜொலிக்கும் தமிழர்கள்

பொது வாழ்க்கை, சமூக சேவை, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், கலை - இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த 119 பேருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டை சேர்ந்த சாலமன் பாப்பையா, பி. அனிதா (விளையாட்டு), பாம்பே ஜெயஸ்ரீ (கலை) உள்ளிட்ட 11 பேருக்குப் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா விழா நடத்தலாம் கிராமசபை கூட்டம் கூடாதா? - கமல் கேள்வி

சென்னை: ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராமசபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானியின் தந்தை காலமானார்!

கோயம்புத்தூர்: இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் தந்தை இன்று (ஜன.26) காலமானார்.

குடியரசு தின விழா: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து!

நாட்டின் 72ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இந்திய விளையாட்டு வீரர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பத்ம விபூஷண் விருதைப் பெற்ற ஜாம்பவான்கள்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, மறைந்த நரிந்தர் சிங் கபானி, சிற்பக் கலைஞர் சுதர்சன் சாஹோ உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

டெல்லி: அனுமதி வழங்கப்பட்ட இடத்தை விட்டு டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டுள்ளது.

பாப்பம்மாள் போராட்டங்களில் முன் நிற்பவர்: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள பாப்பம்மாள் அடிக்கடி என்னை வந்து சந்திப்பவர்; கழக போராட்டங்களிலும் முன் நிற்பவர் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details