தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS 1PM
TOP 10 NEWS 1PM

By

Published : Aug 11, 2020, 1:33 PM IST

வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு! செய்தியாளர் சந்திப்பை பாதியில் நிறுத்திய ட்ரம்ப்!

வாஷிங்டன்: வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதையடுத்து அதிபர் ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பை பாதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

செய்யாற்றில் மணல் திருட்டு: மூன்று பேர் கைது, ஐந்து லாரிகள் பறிமுதல்!

காஞ்சிபுரம்: மாகரல் செய்யாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து ஐந்து லாரிகளை பறிமுதல் செய்தனர்.

"மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக அதிமுக, திமுக கட்சிகள் விளங்க வேண்டும்" - கருப்பு முருகானந்தம்

நாகை : மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக அதிமுக, திமுக கட்சிகள் விளங்க வேண்டும் என்று மயிலாடுதுறையில் பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.

'எடப்பாடியார் என்றும் முதல்வர்': அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: எடப்பாடி பழனிசாமி தான் என்றும் முதலமைச்சர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

உறவினர்கள் வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற இளைஞர்: விபத்தில் பலி!

திருவண்ணாமலை: செங்கம் அருகே காதணி விழா அழைப்பிதழை உறவினர்களிடம் கொடுக்கச் சென்ற இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, சிங்கப்பூா், துபாயில் சிக்கித்தவித்தோர் சென்னை வருகை!

சென்னை: அமெரிக்கா, சிங்கப்பூா், துபாய் நாடுகளில் சிக்கித்தவித்த இந்தியா்களில் 297 போ் மீட்கப்பட்டு மூன்று சிறப்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

பெண்களுக்கு பாலியல் தொல்லை - தலைமை காவலர் மீது புகார்!

சென்னை: வீட்டில் குடியிருக்கும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக தலைமைக் காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்துள்ளார்.

கேரளா நிலச்சரிவு: உயிரிழப்பு 50ஆக உயர்வு!

இடுக்கி: கேரளாவின் ராஜமலையில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.

கரோனா நோயாளிகளுக்காக ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றிய நபர்

பெங்களூரு : மாநகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் அவசர ஊர்தி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் உள்ளதையறிந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது ஆட்டோவினை அவசர ஊர்தியாக மாற்றி கரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு இலவசமாக உதவிபுரிந்து வருகிறார்.

நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த தாய்- மகன் உள்பட மூவர் கைது!

விருதுநகர்: சிவகாசி அருகே புதுமணப்பெண் ஒருவர் நகைக்காக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் எதிர்வீட்டில் வசித்துவந்த தாய், மகன் உள்பட மூன்று பேரை காவலரகளை கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details