தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 4pm

ஈடிவி பாரத்தின் 4 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv bharat top 10 news 4pm
etv bharat top 10 news 4pm

By

Published : May 24, 2020, 3:44 PM IST

பத்து மில்லியன் குழந்தைகள் ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்படும்!

கரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தால், உலக அளவில் 10 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளன.

இலங்கையில் முடிவுக்கு வரும் ஊரடங்கு!

கொழும்பு: இலங்கையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் மே 26ஆம் தேதியுடன் விலக்கிக் கொள்ளப்படவுள்ளது.

ஜி.எஸ்.டியில் புதிய வரியா? நிதியமைச்சகம் மறுப்பு

டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் புதிதாக பேரிடர் வரி சேர்க்கப்படும் என்ற தகவல் உண்மையில்லை என மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது.

கரோனா காலத்தில் போலி மின்னஞ்சல் உலாவுகிறது...! ஐ.நா. எச்சரிக்கை

நியூயார்க்: கரோனா லாக்டவுன் காலத்தில் இணையத்தில் போலி மின்னஞ்சல் உலவும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னையில் நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்கலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 இடங்களில் உள்ள தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி - ஒத்தி வைக்க கோரிக்கை

சென்னை: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை ஒத்தி வைக்க இடைநிலை ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரியாணி சாப்பிட ஆசை...! கரோனா வைத்தது பூசை...!

ஊரடங்கு முடிந்ததும் ஒரு கட்டு கட்டனும் என்று ஆசை கொள்ளும் பலர், இந்த ரம்ஜானுக்காவது பிரியாணி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் தவிக்கின்றனர். இந்த தொகுப்பின் மூலம் பிரியாணியை சுவைப்போம்!

'க/பெ ரணசிங்கம்' டீஸர்- தங்கைக்கு வாழ்த்து தெரிவித்த ஜி.வி. பிரகாஷ்

'க/பெ ரணசிங்கம்' திரைப்படத்தில் அறிமுகமாகியிருக்கும் தங்கை பவானி ஸ்ரீக்கு நடிகர் ஜி.வி. பிரகாஷும், பாடகி சைந்தவியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பயிற்சிக்கு திரும்ப முடியாது: ஒலிம்பிக் பொது செயலாளரின் கருத்துக்கு ஆதரவளிக்கும் விளையாட்டு வீரர்கள்...!

கரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நேரத்தில், வீரர்களின் பயிற்சிக்கு அவசரம் காட்டப்படுவது ஏன் என்ற இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தாவின் கருத்துக்கு விளையாட்டு வீரர்கள் பலரும் ஆதரவளித்துள்ளனர்.

நான்கு கேமராவுடன் வெளியான ஸ்மார்ட்போன்...! விலை இவ்வளவு குறைவா

பின்புறம் நான்கு கேமராக்களை கொண்டுள்ள TECNO SPARK 5 என்ற புதிய ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details