தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

etv-bharat-top-10-news-1pm
etv-bharat-top-10-news-1pm

By

Published : Aug 28, 2020, 1:18 PM IST

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவாரூரில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 'தேர்தல் வந்தால் தான், கூட்டணி குறித்து தெரியவரும் என்றும், கூட்டணியில் யார் என்பதே இன்னும் முடிவாகவில்லை' என்றும் தெரிவித்தார்.

'தேர்வில் தோல்வியடைந்தவர்களை தேர்ச்சிபெற்றதாக அறிவிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை'

சென்னை: தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை, தேர்ச்சிபெற்றதாக அறிவிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி காலமானார்

சென்னை: கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

விசாரணை வளையத்தில் எஸ்.வி.சேகர் - கைது செய்யப்படுவாரா?

சென்னை: தேசியக்கொடியை அவமதித்தது உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் இன்று (ஆகஸ்ட் 28) இரண்டாவது முறையாக மத்திய குற்றப்பிரிவின் முன் ஆஜராகியுள்ள நடிகர் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

மீன்பிடிக்க வீசிய வலையிலேயே சிக்கிக்கொண்ட மீனவர்... கடலில் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

ராமநாதபுரம்: தேவிப்பட்டினத்தில் மீன் பிடிக்க வலை வீசும் போது, மீனவரின் கால் எதிர்பாராத விதமாக வலையில் சிக்கி, கடலில் தவறி விழுந்ததில் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

'பல்கலைக் கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும்'- உச்ச நீதிமன்றம்!

கரோனா அச்சுறுத்தலால், பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்யக்கோரி மாணவர்களின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு: 3 பேர் மீது வழக்குப்பதிவு!

விழுப்புரம்: மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் உத்தரவு செல்லாது - உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை உயர்த்தி புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் சூரியின் ரசிகர்கள்

சென்னை : நகைச்சுவை நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

ஜப்பான் பிரதமர் பதவி விலகினார்!

டோக்கியோ: உடல் நலக் குறைவு காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸா அபே ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details