தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

etv-bharat-top-10-news-1pm
etv-bharat-top-10-news-1pm

By

Published : Aug 27, 2020, 1:12 PM IST

41ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் தொடங்கியது... எதிர்பார்ப்புகள் என்னென்ன?

2017ஆம் ஆண்டு நடப்பில் இருந்த அனைத்து வரிகளையும் ஒருங்கிணைத்து, சரக்கு, சேவை வரியை மத்திய அரசு அமல்படுத்தியது. மாதந்தோறும் நடைபெறும் இதன் கூட்டத்தில் வரி விதிப்புகள், வரிச் சலுகைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். இச்சூழலில் இன்று 41ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.

கரோனா தடுப்புப் பணிகள்: கடலூரில் முதலமைச்சர் ஆய்வு

கடலூர்: கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வுக்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 27) கடலூர் சென்றார். பல்வேறு துறைகளின் திட்டப் பணிகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

'அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு'

டெல்லி: அருந்ததியருக்கு மூன்று விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (ஆக. 27) தீர்ப்பு வழங்கியுள்ளது.

மலையில் அமர்ந்து காவிரியைக் கண்காணிக்கும் உச்சி விநாயகர்!

'குன்று இருக்கும் இடமெல்லாம், குமரன் இருக்கும் இடம்' என்பார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலும் முருகன், பெருமாள் ஆகிய இருவர் மட்டுமே மலை தெய்வங்களாக இருப்பர். ஆனால், தமிழ்நாட்டின் இதயமாக உள்ள திருச்சியின் மலைக்கோட்டையில் மட்டும் தான் விநாயகர் தெய்வமாக குடிகொண்டுள்ளார்.

வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்கும் டிராய்!

ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள சில எலைட் திட்டங்களுக்கு டிராய் தடைவிதித்திருந்த நிலையில், தற்போது வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்திடம் இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'கைலாசாவில் விவசாயம் செய்ய அனுமதி தாருங்கள்' - நித்யானந்தாவிற்கு கோரிக்கை விடுத்த விவசாயி

மதுரை: கைலாசா நாட்டில் விவசாயம் செய்வதற்கு இடம் வழங்க உத்தரவிடக்கோரி, மதுரையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் நித்யானந்தாவுக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெம்போ மீது இருசக்கர வாகனம் மோதி தாய், மகன் உயிரிழப்பு!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே டெம்போ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், தாய், மகன் இருவரும் உயிரிழந்தனர்.

போரூரில் கொடூரமாக இளைஞர் படுகொலை!

சென்னை : முன்விரோதம் காரணமாக கை, கால்கள் கட்டப்பட்டு, தலையில் கல் வீசப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்

பொன்னான எதிர்காலத்திற்கான ஒரு புதிய ஆரம்பம்

புதிய கல்விக் கொள்கை தொடர்பான முக்கியக் கூறுகளை அலசும் சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ.

கோட்டு சூட்டுல கலக்கும் ’சித்தப்பு’ சரவணனின் போட்டோஸ்!

நடிகர் சரவணனின் அண்மைப் புகைப்படத் தொகுப்பு...

ABOUT THE AUTHOR

...view details