உரிமை மீறல் நோட்டீஸ்: திமுக எம்எல்ஏக்கள் தொடா்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸுக்கு எதிராக, திமுகவினர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. குட்காவை பேரவைக்குள் எடுத்துச்சென்றதால் அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது
தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம்
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு செய்ய உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் 15 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் முன்னதாக விரிவாக ஆலோசனை நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக இந்த 15 பல்கலைக்கழகங்கள் சார்பில் தலா 20 முதல் 25 பேர் புதிய கல்விக் கொள்கை குறித்துத் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும், பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் ஆகியோரும் இதில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்து கேட்புக் கூட்டம் இன்று காலை 9.30 முதல் 4 மணி வரை ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.
மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பூசி - அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்