தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

75ஆவது சுதந்திர தின கட்டுரைப் போட்டி: ஆளுநர் மாளிகை அறிவிப்பு

75ஆவது சுதந்திர தின கட்டுரைப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.

75 வது ஆண்டு சுந்திரத் திருநாளில் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி: ஆளுநர் அறிவிப்பு
75 வது ஆண்டு சுந்திரத் திருநாளில் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி: ஆளுநர் அறிவிப்பு

By

Published : Jul 15, 2022, 9:05 PM IST

சென்னை:தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவின் 75 ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி , மாநில அளவிலான தமிழ், ஆங்கிலம், கட்டுரைப்போட்டியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம். 2047 ஆம் ஆண்டில் இந்தியா உலகளவில் வளர்ச்சி பெறுவதற்கான இளைஞர்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் நான் விரும்பும் சுந்திரப் போராட்ட வீரர் என்னும் தலைப்பில் தமிழிலும், "My favourite Freedom Fighter" என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்கள் 2047 இல் இந்தியா என்ற தலைப்பில் தமிழிலும், "India by 2047" என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் ஒரு பக்கத்திற்கு 20 வரிகள் என 10 பக்கங்களுக்குள் கட்டுரையை ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாலை 6 மணிக்குகள் எழுதி அனுப்பலாம்.

கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், 2ஆம் பரிசு 75 ஆயிரம், 3 ஆம் பரிசு 50 ஆயிரமும், பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.75 ஆயிரம், 2 ஆம் பரிசு 50 ஆயிரம், 3 ஆம் பரிசு 25 ஆயிரமும் சான்றிதழும் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்.

தமிழ் கட்டுரைகளை இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மாெழிச்சாலை, பெரும்பாக்கம், சென்னை 600 100 , ஆங்கில வழி கட்டுரைகளை துணை வேந்தர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழகம், அண்ணாசாலை, கிண்டி, சென்னை -600 032 முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:சிபிஎஸ்இ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடுவதில் தொடரும் சிக்கல்

ABOUT THE AUTHOR

...view details