சென்னை:12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி கூறும்போது, "12ஆம் வகுப்பு மாநிலப்பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கும் முறையை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 10ஆம் வகுப்பில் அதிகம் பெற்ற 3 பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல், கணக்கு பாட மதிப்பெண்கள்
கணக்கு, அறிவியல் பாடங்களின் மதிப்பெண்களை கண்டிப்பாக கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் எனக் கருதுகிறோம். அந்த மதிப்பெண்கள் அடிப்படையில்தான் அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர்களைச் சேர்க்க முடியும். இதனைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்கும் வல்லுநர் குழு மறுசீரமைப்பு செய்வார்கள், தெளிவான அறிக்கையை அளிப்பார்கள் என கருதுகிறோம்.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாணவர்களின் கல்வி கற்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. 11 ம் வகுப்பில் ஆர்வம் சற்றுக் குறைவாகவும் இருக்கிறது. அறிவியல் பாடத்திட்டதிற்கான மதிப்பெண்களை மாெழிப்பாடத்துடன் சேர்த்துக் கருத முடியாது. அறிவியல் பாடத்திற்கான மதிப்பெண்களை இயற்பியல், வேதியியல், தாவரவியல் ஆகிய அனைத்துப் பாடங்களுக்கும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வணிகவியல் பாடத்தில் படிக்கும் மாணவர்களுக்கான மதிப்பெண்களை வழங்குவது குறித்து பின்னர் தெளிவான விதிமுறைகளை அறிவிப்பார்கள். 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை 3 பாடங்களில் இருந்து எடுப்பது குறித்தும் தெளிவாக அறிக்க உள்ளனர்.