ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிலிருந்து காரில் குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றார்.
எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் சாமி தரிசனம்!
அமராவதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
edappadi palanisamy
மாலை திருமலைக்கு சென்றடைந்த முதலமைச்சரை ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான துணைச் செயல் அலுவலர் பாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
நேற்று இரவு வராக சுவாமி ஹயக்ரீவர் கோயிலில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர், இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமிதரிசனம் செய்தார்.