தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.2 லட்சம் பறிமுதல்

நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் அரிப்பை தடுக்கும் பிரிவு உதவி செயற்பொறியாளரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை விடிய விடிய சோதனை நடத்தினர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 6, 2023, 8:41 AM IST

Updated : Jul 6, 2023, 10:05 AM IST

சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் என்ற பொதுப்பணித் துறை வளாகத்தில் நீர்வளத்துறை உள்பட பல்வேறு துறை சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், நீர்வளத் துறையின் கீழ் செயல்படும் கடல் அரிப்பை தடுக்கும் பிரிவு உதவி செயற்பொறியாளராக பாஸ்கரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், ஒப்பந்ததாரர்களின் லைசன்ஸ்களை புதுப்பிப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன் அலுவலகத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இவ்வாறு விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையானது நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது.

பின்னர், இந்த சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத 2 லட்சத்து 14 ஆயிரத்து 540 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதேநேரம், பணத்திற்கு உண்டான தகுந்த ஆவணங்கள் இல்லாததால் உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க:செங்குன்றம், உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.3000 கோடி!

Last Updated : Jul 6, 2023, 10:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details