சென்னை: சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று முடிவடையும் முன்பு வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 40ஆண்டு காலப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், பாமகவினர் நேற்று பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கொடுத்தார்கள்... அதனால் வென்றார்கள்- ராமதாஸ் ட்வீட்
வன்னியர்களுக்கான இடப்பங்கீட்டை கொடுத்தார்கள், அதனால், மீண்டும் வென்றார்கள் என்று சொல்கிற வகையில் வன்னியர்களின் களப்பணி அமையவேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
கொடுத்தார்கள்...அதனால் வென்றார்கள்- ராமதாஸ் ட்வீட்
இந்நிலையில், "வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள், அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்" என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க:தன்னை நம்பும் சமுதாயத்தை ராமதாஸ் ஏமாற்றுகிறார்- தொல். திருமாவளவன்