தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீக்க வலியுறுத்தி டி.ஆர். பாலு கடிதம்

சென்னை: பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை மாநில அரசுகள் நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு டி. ஆர். பாலு கடிதம் எழுதியுள்ளார்.

Central Government
Central Government

By

Published : Nov 7, 2020, 2:47 PM IST

பட்டாசு வெடிப்பதற்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடைவிதித்திருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர். பாலு மத்திய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ராஜஸ்தான் மாநிலம் அதனைத் தொடர்ந்து பல மாநிலங்களும் தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் பட்டாசு வெடிக்க திடீர் தடைவிதித்திருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் இந்த ஒருதலைபட்சமான முடிவு தமிழ்நாட்டில் உள்ள பட்டாசு தொழிலை கடுமையாகப் பாதித்துள்ளது.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அக்குவேறு ஆணிவேராக ஆய்வு செய்தபின் பட்டாசு வெடிப்பதை அனுமதித்துள்ளது. இந்த உண்மைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் பல்வேறு மாநில அரசுகள் தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் பட்டாசு வெடிப்பதற்குத் தடைவிதித்திருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த ஆதாரமற்ற அறிவியல் உண்மைக்குப் புறம்பான தடை, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல தமிழ்நாட்டில் அமைந்துள்ள பட்டாசு தொழிலில் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

தீபாவளி போன்ற பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் பண்டிகை காலத்தில் இத்தகைய திடீர் தடையால் ஏற்படும் இழப்பில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பது மத்திய அரசின் கடமை என்பதால் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பருவக் காய்ச்சல் பட்டுனு விலகணுமா? வீட்டு வைத்தியம் தெரிஞ்சிக்கங்க!

ABOUT THE AUTHOR

...view details