தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கவில்லை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடை விதிக்கவில்லை எனவும் அவரவர் வீடுகளில் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

sடலின்
sடலின்

By

Published : Sep 9, 2021, 3:50 PM IST

காவல் துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், ”விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

பல இடங்களில் விநாயகர் சிலைகளை காவல் துறையினர் அகற்றும் வீடியோ பார்ப்பது வருத்தமாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட சில கட்டுப்பாடுகள் விதித்து அரசு வழிகாட்டுதலோடு அனுமதி வழங்குவதற்கான அறிவிப்பை இன்றே முதலமைச்சர் வெளியிட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

அதற்கு விளக்கமளித்து பேசிய முதலமைச்சர், விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாது என அரசு சொல்லவில்லை. ஒன்றிய அரசு வழிகாட்டுதலின்படிதான் விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் கட்டுக்குள் இன்னும் வரவில்லை. பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாட, ஒன்று கூடி ஊர்வலமாக செல்ல மட்டும்தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவர் வீடுகளில் உரிய வழிமுறைகள் பின்பற்றி சிலை வைத்து கொண்டாடலாம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details